தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் (Meenakshi Govt College) முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
கல்லூரிக்கல்வி இயக்குநர் அவர்களால் மதுரை மீனாட்சி அரசினர் கலைக் கல்லூரியில் (Meenakshi Govt College) பணிபுரியும் பல பேராசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆணை பெறப்பட்டு பல மாதங்கள் நிறைவுற்றுள்ள நிலையிலும் இன்று வரை பணப்பலன்களை பெற்று வழங்கவில்லை. இதற்கு நிதியாளர் அவர்கள் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. நிதியாளரின் இந்த மெத்தனப் போக்கு பண மதிப்பிழப்பினை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
இதனால் தொடர்புடைய பேராசிரியர்கள் மிகுந்த மன உளைச்சல்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரி பேராசிரியர்களும் பணப்பலன்களை பெற்றுவிட்டனர்.
மேலும் 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் பணிமேம்பாடு கருத்துருக்கள் இன்னும் கல்லூரிக்கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பாமல் தேக்கநிலையிலேயே உள்ளது.
இதையும் படிங்க : https://itamiltv.com/i-request-the-tnpsc-management-and-tamilnadu-government-to-postpone-the-written-test-for-integrated-engineering-posts-ttv/
எங்களது கல்லூரியில் தமிழ் வழியில் பயிலும் சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவியர்களுக்கு தமிழ்வழிகல்வி உதவித்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் இன்னும் வரவு வைக்கப்படவில்லை.
தமிழக முதல்வர் அரசுப்பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை மூன்று மாதங்களுக்கு முன்பே உயர்த்தி அரசாணை பிறப்பித்து அரசுப்பணியாளர்களுக்கு உடனடியாக வழங்க அறிவுறுத்தியுள்ளார். .
தமிழக அரசின் கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்திலிருந்து கடந்த ஆண்டு ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கொள்முதல் செய்த பொருட்களுக்கான தவணை தொகை கடந்த 10 மாதங்களாக பிடித்தம் செய்யப்படாதது அரசிற்கு நிதி இழப்பாகவும் பணியாளர்களுக்கு நிதிச்சுமையாகவும் உள்ளது.
2022 -2023 ஆம் கல்வியாண்டில் உடற்கல்வி துறையின் சார்பாக போட்டிகளில் கலந்து கொண்ட செலவிடப்பட்ட விளையாட்டு மாணவியர்களுக்கு உடற்கல்வி இயக்குநர் அவர்களால் செலவினங்கள் தொடர்பான பட்டிகள் முறையாக அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
நிதியாளர் அவர்களின் முறையற்ற செயல்பாடுகளால் சுமார் ரூபாய் 75,000/- க்கான செலவினப் பட்டிகள் தீர்வு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதிப்பிற்குரிய கல்லூரிக்கல்வி இயக்குநர் அவர்களை கழக உறுப்பினர்கள் நேரில் சந்தித்து தீர்வுகாண வேண்டி கடிதம் கொடுத்திருந்தோம்.
இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் கோப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : https://itamiltv.com/senthil-balaji-case-900-people-included-central-crime-branch-police-information/
2022-2023 ஆம் கல்வியாண்டைப் போலவே இந்த கல்வியாண்டிலும் 2023 2024 மாணவியாகளுக்கு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள முன் பணம் வழங்க மறுப்பதனால்,
கிராமப்புறத்தை சேர்ந்த ஏழை மாணவியர்கள் தங்களது சொந்த பணத்தை செலவு செய்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
மேலும் எங்கள் கல்லூரியில் பணிபுரியும் நிதியாளரின் ஆசிரியர் மற்றும் மாணவர் நலன் விரோதப் போக்கை கண்டித்து பல்வேறு வடிவத்திலான போராட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளோம்.
இரண்டு முறை நேரில் சென்று கல்லூரிக்கல்வி இயக்குநரை சந்தித்து முறையிட்டுள்ளோம் இருந்தும் தீர்வு எட்டப்படவில்லை.
இவ்வாறான பேராசிரியர்கள் விரோதப்போக்கும் மாணவியர்கள் விரோதப்போக்கும் கடந்த ஓராண்டு காலமாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள் எழுந்த வண்ணம் உள்ளன என்று தெரிவித்தார்.