குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இந்தியாவின் பணக்கார யூ-டியூபரான புவன் பாம் என்பவரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.122 கோடி.
கண்டெண்ட் கிரியேட்டர்ஸ்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் யூ-டியூப் தளம் புகழோடு சேர்த்து பணம் சம்பாதித்து தரும் தளமாகவும் விளங்குகிறது என்பதில் சந்தேகமில்லை.
இதன் காரணமாகவே பலரும் புதிதாக யூ-டியூப் சேனல் சேனல் ஒன்றை தொடங்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அப்படி புதிதாக யூ-டியூப் சேனல்தொடங்க நினைப்பவர்கள் புவன் பாம் என்பவரை பற்றி தெரிந்து கொள்வைத்து அவசியம்.
யூ-டியூப் சேனல் மூலம் ரூ.122 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் பணக்கார யூ-டியூபராக அறியப்படும் இவரது வெற்றிக் கதை பலருக்கும் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
குஜராத் மாநிலம் வடோதராவை சேர்ந்த புவன் பாம் வேடிக்கையான குறுகிய வீடியோ தொடரான பிபி கி வைன்ஸில் பல கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். இதன் மூலம் இணைய உலகில் தனக்கென ஒரு பிராண்டை உருவாக்கினார்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர், இசையமைப்பாளராக சினிமா துறையில் தனது வாழ்க்கையை தொடங்கினார். ஆனால், அந்த துறையில் எவ்வளவு கஷ்டப்பட்டும் அவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. தொடக்க காலத்தில் கஃபேக்கள் மற்றும் உணவகங்களில் இசைக்கலைஞராக பணியாற்றி மாதம் ரூ.5000 மட்டுமே சம்பாதித்து வந்த இவர் ஒருகட்டத்தில் தனது இசைப் பயணத்தை கைவிட முடிவு செய்தார்.
அதன் பிறகு தான், கண்டெண்ட் கிரியேஷனுக்கான புதிதாக யூ-டியூப் சேனல் ஒன்றை தொடங்கி தற்போது இந்தியாவின் பிரபலமான யூ-டியூபராக மாறியுள்ளார். காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபரிடம் பத்திரிகையாளரின் கேள்விகளை மையப்படுத்திய காமெடி வீடியோ ஒன்றை தான் யூடியூப்பில் புவன் பாமின் முதல் வீடியோவாக பதிவிட்டார்.
பின்னர், தனது பிபி கி வைன்ஸ் என்ற தொடரைத் தொடங்கி, அதில் அவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் கதாபாத்திரங்களில் நடித்து சிறிய வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். தற்போது இவருடைய சேனலுக்கு 26 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
மேலும், இவரது சொத்து மதிப்பு சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது, இந்திய மதிப்பில் ரூ.122 கோடி. மாதம் ரூ.5000 சம்பளத்தில் தொடக்கி தனது திறமைகள் மூலம் ரூ.122 கோடி சொத்துக்கு தற்போது அதிபதியாக இருக்கும் புவன் பாம், நிச்சயம் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் நபர்தான் என்பதில் சந்தேகமில்லை.