இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை (செய்தியாளர்களை) சந்திக்கிறேன். என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் (Actor kamal) தெரிவித்துள்ளார்.
விக்ரம் வெற்றிக்குப் பின்னர் கமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இந்தியன் 2 ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தக் லைஃப் படப்பிடிப்பில் கமல் பிஸியாகிவிட்டார்.
நாயகன் படத்திற்குப் பின்னர் 33 ஆண்டுகள் கடந்து மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வருகிறார் கமல். ஏஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.
கமலுடன் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்திற்காக படத்தின் முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா சென்றிருந்த கமல்ஹாசன் (Actor kamal) இன்று காலை சென்னை திரும்பினார்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவரிடம் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை (செய்தியாளர்களை) சந்திக்கிறேன். இப்போதைக்கு இது தான் செய்தி.
வெளிநாட்டில் இருந்து செய்தியை கொண்டு வரவில்லை. கட்சியினருடன் பேசிவிட்டு 2 நாட்களில் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறேன். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நன்றாக நடந்து கொண்டிருக்கின்றது” எனத் தெரிவித்தார்.
https://x.com/ITamilTVNews/status/1759464393375617253?s=20
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இதையும் படிங்க : omni bus உரிமையாளர்கள் மனு!- தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
அதே சமயம் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 2 இடங்களில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை (செய்தியாளர்களை) சந்திக்கிறேன். என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.