காசாவில் போர் நிறுத்தம் செய்ய உலக நாடுகளுக்கு மெகபூபா முஃப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தி,கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுடன் பாலஸ்தீன ஆதரவு மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஸ்ரீநகரில் போராட்டம் நடத்தினார்.
அந்த போராட்டத்தில் இஸ்ரேல் திரும்பிப் போ’ மற்றும் ‘பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு’ கோஷங்களுடன் முழக்கமிட்டு, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி ஸ்ரீநகரில் லட்சகணக்கான கட்சித் தொண்டர்களுடன் கண்டனப் பேரணியை நடத்தினார்.
இதனை தொடர்ந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல் துறையினர் முஃப்தியையும் அவரது ஆதரவாளர்களையும் லால் சௌக் நகர மையத்தை நோக்கிச் செல்ல அனுமதிக்கவில்லை, மேலும் அவர்களை PDP அலுவலகத்திற்கு அரை கிலோமீட்டர் முன்னால் தடுத்து நிறுத்தினர்.
மேலும் காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளின் படத்தை எடுத்துக்கொண்டு, லால் சௌக் ஸ்ரீநகர் நோக்கிச் செல்லும் வழியைத் தடுக்க முயன்ற போது காவல்துறை மெஹபூபா முஃப்தி தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முப்தி, பாலஸ்தீனத்தில் கடும் அநீதி நடக்கிறது, போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், உலகமே எழுந்து நின்று போரை நிறுத்த வேண்டும்.
“காசா மக்கள் எதிர்கொள்ளும் அட்டூழியங்களுக்கு எதிராக நாங்கள் இங்கு இருக்கிறோம், மனிதாபிமான அடிப்படையில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஐ.நா.விடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று அவர் கூறினார். காசாவில் போர்நிறுத்தம் கொண்டுவர உலக நாடுகள் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.