இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று தாக்காவில் நடைபெற்றது இதில் முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி 271 ரன்கள் குறித்தது அந்த அணியில் மிடிலாடர் பேட்ஸ்மேன்களான முகமதுல்லா மற்றும் மெகதிஹாசன் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்
அதிரடியாக விளையாடிய மெகதி ஹாசன் தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டையும் கைபற்றினர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ஆரம்ப முதலிலேயே தடுமாறி வந்தது தொடக்க வீரர்களான தவான், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் தாக்குப் பிடித்து ஆடி ரன் சேர்த்தார் அவருடன் ஜோடி சேர்ந்து அக்சர் படேலும் நிலைமையை சரி செய்தார்.
ஒரு கட்டத்தில் இருவரும் அவுட் ஆக பின்னர் வந்த வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் திணறினர். இறுதி கட்டத்தில் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். இருப்பினும் இறுதி ஓவரில் இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவியது இதனால் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை பங்களாதேஷ் அணி 2-0 என்ற கணக்கில் வென்றது.
இந்த போட்டியில் 8வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆல் ரவுண்டர் மெகதி ஹாசன் சதம் அடித்து அசத்தினார். இதற்கு முன்னதாக சர்வதேச ஒரு நாள் போட்டியில் அயர்லாந்து வீரர் சிமி சிங் தான் 8 வது விக்கெட்டில் களமிறங்கி சதம் அடித்தார். அந்த சாதனையை தற்போது மெகதி ஹாசன் சமன் செய்துள்ளார்.