நவம்பர் மாத இறுதியில் ஒரு புயல் வந்து ஓய்ந்த நிலையில் தற்போது டிசம்பரில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .
தமிழ்நாட்டில் பருவ மழை தொடங்கிய நாள் முதல் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை அவ்வப்போது பெய்து வந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்துவங்கியது.
Also Read : திருவண்ணாமலை மண் சரிவு – வெளியான அதிர்ச்சி தகவல்..!!
இந்நிலையில் டிசம்பரில் அதிகமாக மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த வார இறுதியில் புயல் உருவாகும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்திக்கு வானிலை மையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
புயல் உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதைய வானிலை நிலவரப்படி இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.