நடிகரும் முன்னாள் முதலமைச்சருமான (MGR Birthday) எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் நாளை நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .
இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
அதிமுக நிறுவனத் தலைவர், ‘பாரத் ரத்னா’ புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 107-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர்,
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், 19.1.2024 அன்று, வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில்
சிறப்பாக நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புப் பேருரை ஆற்றுவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 19.1.2024 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 31.1.2024 புதன் கிழமை அன்று,
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்,
தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி பங்கேற்று சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார் (MGR Birthday) என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த செய்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் இருக்கும் இரு பெரும் காட்சிகளில் ஒன்றாக அதிமுக இன்றைய நிலைமையில் பிளவு பட்டு இருப்பது கட்சியின் அடிமட்ட தொண்டன் வரை நன்றாக தெரிகிறது.
அதே சமயம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து வெளியேற்ற பட்டதால் தற்போது எதிர் வரும் தேர்தலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் சேர்ந்து சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Also Read : https://itamiltv.com/medical-conference-at-nandambakkam-trade-centre/
இதையடுத்து யார் பெரியவர் என்று காட்டும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்த .
நாங்களும் பெரியவர்கள் தான் என்று காட்டும் வகையில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தினார்.
இப்படி இருக்கும் நிலையில் அதிமுக வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்று இன்று வரை தெரியவில்லை.