மாணவர்களின் கல்வி விசயத்தில் நிர்பந்திக்கும் செயலை ஏற்க இயலாது என தெரிவித்துள்ளோம். தமிழ்நாடு ஏற்க இயலாத பல விசயங்கள் தேசிய கல்விக் கொள்கையில் இருக்கிறது என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது :
தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புக் கொண்டால் அடுத்த 1/2 மணி நேரத்திலேயே தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிப்பதாக மத்திய கல்வி அமைச்சர் எங்களிடம் தெரிவித்தார் .
மாணவர்களின் கல்வி விசயத்தில் நிர்பந்திக்கும் செயலை ஏற்க இயலாது என தெரிவித்துள்ளோம். தமிழ்நாடு ஏற்க இயலாத பல விசயங்கள் தேசிய கல்விக் கொள்கையில் இருக்கிறது.
மாநில கல்வியின் தரம் குறைவாக உள்ளதாக கவர்னர் விமர்சித்ததற்கு பதில் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது :
மத்திய கல்வித் திட்டத்தை விட, தமிழ்நாடு கல்வித் திட்டம் சிறப்பாக தான் உள்ளது . ஆளுநர் வர விரும்பினால் எந்த நூலகத்திற்கு வேண்டுமானாலும் அவரை அழைத்துச் செல்ல நான் தயார்.
Also Read : படுக்கை வசதியுடன் அறிமுகமாகும் வந்தே பாரத் ரயிலில் இத்தனை வசதிகளா..?
நூலகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடம், எது சிறந்த கல்வித்திட்டம் என ஆளுநரே நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.
எப்போதும் கொள்கையை விட்டுக்கொடுத்து, மத்திய அரசிடமிருந்து நிதி பெற மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம்.
தலைமைச் செயலாளர் மூலம் எழுதப்பட்ட கடிதத்தில் எங்கள் நிலையை தெளிவுபடுத்தி விட்டோம்; SSA திட்டத்திற்கான நிதியையே கேட்கிறோம்; பி.எம்.ஸ்ரீ. திட்டத்தை சேர்க்க வேண்டாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.