கமாண்டோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் வருண்சிங்கின் உடல்நிலை குறித்து மந்திரி அரக ஞானேந்திரா நேரில் விசாரித்தார்.
தமிழ்நாடு நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வருண்சிங் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவர் கடந்த 9-ந் தேதி மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள கமாண்டோ மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வருண்சிங் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்றும், அதே நேரத்தில் அவரது முக்கியமான உடல் உறுப்புகள் இயல்பாக செயல்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் கமாண்டோ மருத்துவ மனைக்கு நேரில் சென்று வருண் சிங்கின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
இந்த நிலையில் மந்திரி அரக ஞானேந்திரா, நேற்று கமாண்டோ மருத்துவமனைக்கு நேரில் வந்து, வருண்சிங்கின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.