298 ரூபாய்க்கும் குறைந்த வருமானத்தில் 40% பேர் இருக்காங்க, இது மோடிக்கு வெட்கமா இல்லையா? என ( Mano Thangaraj ) தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
இந்தியாவில் 40% க்கும் அதிகமானோர் ஒரு நாளைக்கு 298 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கிறார்கள். ஆனால் கோடீஸ்வரர்களின் வருவாய் உயர்ந்து கொண்டே வருகிறது.இது பிரதமர் மோடி அவர்களுக்கும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வெட்கம் இல்லையா?
மோடிஅரசு கார்ப்பரேட் வரியை 2019 – ல் 30% லிருந்து 22% ஆக குறைத்தது, இது இரண்டு ஆண்டுகளில் அரசிற்கு 1.84 லட்சம் கோடி வருவாய் இழப்பை ஏற்பபடுத்தியது. இந்தத் தொகை 2020-21 ஆம் ஆண்டில் MGNREGA மற்றும் NFSA ஆகிய இரண்டு திட்டங்களுக்கான பட்ஜெட்டுகளை விட அதிகமானது.
Also Read : தென்மேற்கு பருவமழை தொடங்கியது – தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!!
இந்தியாவின் முதல் 1% பணக்காரர்களின் சொத்து மதிப்பு வரலாற்று உச்சத்தில் உள்ளது, இது பிரிட்டிஷ் ஆட்சி நடந்த போது இருந்த அளவை விட அதிகம். 0.001% மேல் தட்டு மக்கள் (10 ஆயிரத்திற்கும் குறைவான நபர்கள்) 50% கீழ் தட்டு மக்களை விட மூன்று மடங்கு அதிக சொத்து வைத்துள்ளனர்.
இந்த இடைவெளியை குறைக்க வேண்டும் எனபதற்காக தான் சமத்துவத்தை வலியுறுத்தும் திமுக தொடர்ந்து ( Mano Thangaraj ) நலத்திட்டங்களை நடைமுறை படுத்தி வருகிறது என்ற உண்மை இப்போதாவது புரிகிறதா? அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.