எங்கள் பகுதியில் குறை இருக்கிறது என அமைச்சரிடம் முறையிட்ட மூதாட்டியை,கொஞ்சம் நீ வாயை மூடுனு இரு என அமைச்சர் பொன்முடி ஒருமையில் பேசிய வீடியோ வெளியாகி மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டில் 25.6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகப் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது.
இந்தப் பூங்காவை உயர்கல்வித்துறை அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான க.பொன்முடி திறந்து வைத்தார்.
பின்னர் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்த நாளை ஒட்டி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அப்போது அந்த நிகழ்ச்சியில் திமுக ஆட்சி குறித்து அமைச்சர் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்த பொழுது, கூட்டத்திலிருந்த மூதாட்டி ஒருவர் எங்கள் பகுதியில் குறை உள்ளது எனத் தெரிவித்தார்.
அதற்கு அமைச்சர் மேடையிலிருந்தபடியே நக்கலாகக் குறையாக இருக்கிறதா…? கொஞ்சம் நீ வாயை மூடிட்டு இரு..” உன் ஊட்டுக்காரர் எங்க.. போய் சேர்ந்தாசா.. என ஒருமையில் பேசினார்.
இந்த நிலையில் அருகிலிருந்தவர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த மூதாட்டியை அமைதிப்படுத்தினர்.
இதனை அடுத்துப் பேசிய அமைச்சர் பொன்மொழி நீங்கள் அமைதியாக இருங்கள்… அவர்கள் அவர்களுடைய குறைகளைச் சொல்கிறார்கள் என்று தெரிவித்த அவர் மீண்டும் தனது உரையைத் தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், அனைத்து குடும்பங்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். வருகின்ற சட்டமன்ற குழுத்தொடரில் இது பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
ஓட்டுப் போட்ட பொது மக்களை ஒருமையில் பேசிய அமைச்சர் பொன்மொழியை கண்டித்து எதிர்க்கட்சியினர் இந்த வீடியோவை தற்பொழுது வைரலாகி வருகின்றன.