கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு .இதனை தொடர்ந்து
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீச்ஷீதர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
அப்போது தீட்ஷீதர்களின் நிலைபாடு குறித்து அவர்கள் தெரிவித்தன.அரசின் நிலைபாடு குறித்து நாங்கள் எடுத்துரைத்துள்ளோம் விரைவில், அனைத்து தரப்பினருக்கும் சாதகமான சுமூக தீர்வு ஏற்படும் என்றார்.மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைபடுத்தி கொள்ளவே அப்படி பேசியுள்ளார்.
ஒருவர் பேசியதற்காக மற்றவர்களையும் சேர்த்து குறைகூற கூடாது
விரைவில் மதுரை ஆதீனமும் தமிழக அரசையும், அரசியல்வாதிகளையும் ஏற்றுக் கொள்ள கூடிய நிலை ஏற்படும்.ஆத்தீகர்கள் நாத்தீகர்கள் என அனைவருக்குமான ஆட்சியாகவே திராவிட மாடல் ஆட்சி உள்ளது என தெரிவித்தார்.