ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி(senthil balaji) உடல்நிலை குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மின்சாரத்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல்அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சுமார் 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அதிர்ச்சியடைந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனை ஐசியு பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவருடைய உடல்நிலையை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி(senthil balaji) உடல்நிலை தொடர்பாக ஒமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் நியூஸ் பிரத்யேக தகவல் அளித்துள்ளனர்.அதில் அவருடைய உயர் ரத்த அழுத்தம் 160/100 ஆக இருந்தது.இதய துடிபப்பில் மாற்றம் இருந்தது சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்.
தற்பொழுது அமைச்சர் செந்தில் பாலாஜியின் ,இதயத்துடிப்பு , உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் .இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது .