ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் அடைப்பு காரணமாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால், தற்போது அவரை காவேரி மருத்துவமனைக்கு (kaveri hospital) மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் எந்த வித முன்னறிவிப்பின்றி அவர் கைது செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் அடைப்பு காரணமாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால், தற்போது அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இதய அறுவை சிகிச்சைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு (kaveri hospital) அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.