அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பொருட்கள் தயாரிப்பு பண்ணையில் ஒப்பந்தப் பணியாளர்களாக 50க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதாக தகவல் பரவிய நிலையில் . இச்சம்பவம் குறித்து தீவிர விசாரனை நடத்தி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர் .
இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் சிறார்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை என புதிய பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் மனோதங்கராஜ் விளக்கம் கொடுத்துள்ளார் .
ஆவின் விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது :
ஆவின் நிறுவனத்தில் சிறார்கள் வேலை செய்ததாக வெளியான தகவல் குறித்து முறையான விசாரணை நடத்தியதாகவும், அந்த தகவல் உண்மையில்லை எனவும் விளக்கம் விளக்கமளித்த அமைச்சர் சிறார்களை தவறான முறையில் வழிநடத்தி ஆவின் நிறுவனத்திற்கு எதிராக போராட தூண்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்தார்.
நான் பொறுப்பேற்றதில் இருந்து ஆவின் பால் பண்ணைகளில் தொடர்ந்து நடத்தப்படும் ஆய்வுகளின் படியே வேலூர் சத்துவாச்சாரியில் ஆய்வு நடத்தி ஒரே பதிவு எண்ணில் 2 வாகனங்கள் முறைகேடாக இயக்கப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் ஆவின் நிறுவனத்தில் பால் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கு இடமில்லை என்றும் சுத்தமான சுகாதாரமான பால் அனைவர்க்கும் கிடைக்கும்படி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு புதிய வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார் .