சித்தார்த் நடிப்பில் உருவான ‘மிஸ் யூ’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் என்.ராஜசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமே ‘மிஸ் யூ’ . இந்த படத்தில் கதையின் நாயகனாக சித்தார்த் நடிக்க அவருக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கனாத் நடித்துள்ளார்.
மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி உள்ள இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ஆஷிகா ரங்கனாத்துடன் சேர்ந்து ஜேபி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், மாறன் என பலர் நடித்துள்ளனர்.
Also Read : செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து உடனே நீக்குக – நாராயனண் திருப்பதி..!!
அழகிய லவ் ஸ்டோரி படம் என கூறப்படும் இந்த படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் நவம்பர் 29ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் புயல் எச்சரிக்கை காரணமாக ‘மிஸ் யூ’ திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக படக்குழு அறிவித்திருந்தது .
இந்நிலையில் தற்பொது ‘மிஸ் யூ’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இத்திரைப்படம் வரும் டிசம்பர் 13ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.