சிறுபான்மையினருக்கான கடனுதவியை எளிமைப்படுத்தவேண்டும்” – மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை..!

சிறுபான்மையினருக்கு வழங்கும் கடனுதவி திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் அசாருதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறுபான்மை ஆணையர் பீட்டர் அல்ஃபோன்ஸ் தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் “சிறுபான்மை ஆணைய கலந்தாய்வு கூட்டம்” நடைப்பெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இளைஞரணி மாநில செயலாளர் அசாருதீன் கலந்து கொண்டு மஜக சார்பாக சிறுபான்மையினருக்கு வழங்கும் கடனுதவி திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

கலந்தாய்வு நடந்த அவையிலேயே முதலமைச்சருடன் ஆலோசித்து ஒரு லட்சம் ரூபாய் கடன்களை எந்த ஆவணமுமின்றி வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஆணைய தலைவர் அவர்கள் வாக்குறுதி அளித்தார்.

மேலும் சிறுபான்மை இளைஞர்களுக்கு சங்கம் அமைப்பது தொடர்பாகவும் கோரிக்கை வழங்கப்பட்டது. இதில் மருத்துவ அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் அஹமது ஆகியோர் உடனிருந்தனர்.

Total
0
Shares
Related Posts