தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவியதை அடுத்து அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசிகளும் முழுவீச்சில் செலுத்தப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைவடைந்ததை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது.
தென்ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைரோன் கொரோனா வைரஸ் காரணகாக பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய வகை ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.