திமுக குடும்ப அரசியல் குறித்து பேசிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 27 ஆம் தேதி பிரதமர் மோடி ஐந்து வந்தே பாரத் ரயில் சேவை திட்டதை தொடங்கி வைத்தார்.அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி திமுக குடும்ப அரசியல் குறித்து முக்கிய கருத்துகளை தெரிவித்தார். தமிழ் நாட்டில் திமுகவிற்கு வாக்களித்தால் கருணாநிதியின் வாரிசுகள் மட்டுமே பயன் அடைவார்கள் என்று குற்றம்சாட்டினார்.
வரும் 2024 தேர்தலுக்காக பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஊழல்களுக்கு ஆதரவாக திரண்டுள்ளனர்.ஊழல்வாதிகளை விடமாட்டேன் என்று பிரதமர் மோடி பேசியிருந்தார்.
இந்த நிலையில்,சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இல்லதிருமண விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர்,திமுக குடும்ப அரசியல் குறித்து பேசிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக குடும்ப அரசியலை நடத்திக்கொண்டிருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்;அது உண்மைதான் திமுக குடும்ப அரசியல்தான் ,அதை சொன்னதற்கு நன்றி; திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் குடும்பம்தான் வளர்ச்சியடையும் எனக் கூறியுள்ளார்;
ஆம், கருணாநிதியின் குடும்பம் என்பதே இந்த தமிழ்நாடுதான்; 50 ஆண்டுகாலமாக திராவிட இயக்கத்தால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை பார்த்துவிட்டு பேச வேண்டும்; பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தால் பிரதமர் மோடி அச்சமடைந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.