PMK volunteer questioned Soumya : மழை விட்டாலும் தூவாணம் விடாத கதையாக பாஜகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்து, தொகுதி பிரித்து, பிரச்சாரமும் சூடு பிடித்துள்ள நிலையில்,
வன்னியர் சமூக மக்களின் விருப்பத்தையும் மீறி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக தங்கள் ஆதங்கத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர் பாமக தொண்டர்கள்.
கடந்த சட்டசபைத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி இந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பே அதிமுகவுடனான கூட்டணியை முறித்தது.
அதன் பிறகு தற்போது அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வரும் நிலையில், ‘யாருடன் கூட்டணி அமைப்பது?’ என்பதில் உறுதியான முடிவு எடுக்காமலேயே இருந்தது.
இதையும் படிங்க : ஐயய்யோ….சென்னை குடிநீரில் ஆபத்தான வேதிப்பொருட்களா? அதிர்ச்சி தகவல்கள்!!
பெரும்பாலான பாமக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள், ‘அதிமுகவுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும்’ என்பதில் உறுதியாக இருந்தனர்.
அதற்கு, கடந்த பல ஆண்டுகளாகவே பாமக தொடர்ந்து வலியுறுத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாஜக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதே பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் எனக் கூறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
தவிர, கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அப்போதைய அதிமுக அரசு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்த போது அந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு தெரிவித்த கட்சி பாஜகதான்.
தற்போது சுப்ரீம் கோர்ட் அந்த இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்துள்ள நிலையில், தங்களுக்கு கிடைக்கவிருந்த இட ஒதுக்கீட்டு சலுகைகளை தங்களின் எதிர்ப்புகளின் மூலம் பாஜக தடுத்து விட்டதாகவே வன்னியர் சமூக மக்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் தான், அதிமுகவோடு கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாமக தலைமையானது தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி சேலம் வந்த அதே தினத்தன்று திடீரென பாஜகவுடன் தங்கள் கூட்டணியை உறுதி செய்தது.
இது, கட்சியில் இரண்டாம் மட்டத்தில் இருக்கும் பாமக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அதிமுகவையும் கூட அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதன் பிறகு, பாஜக கூட்டணியில் பாமகவிற்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் துவங்கவே கட்சிக்குள் இருந்த எதிர்ப்பு அலை படிப்படியாக குறைந்து பிரச்சாரத்தில் தீவிரம் காட்டத்துவங்கினர் பாமக தொண்டர்கள்.
இந்நிலையில் தான், தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா வாக்குக்கேட்டு செல்லும் போது அவரிடம் பாமக தொண்டர் ஒருவர் கேள்வி கேட்டு விட்டு அவரது பதிலை எதிர்பாராமல் நகர்ந்து சென்ற சம்பவம் அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதாவது, நேற்றைய தினம் (04.04.2024) பாப்பிரெட்டி பகுதியில், சாலையோரங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார் சௌமியா அன்புமணி.
அப்போது திடீரென அங்கு வந்த இளைஞர் ஒருவர் சௌமியாவிடம் சென்று, “10.5 சதவீத இடஒதுக்கீடு விஷயத்திலும், சாதிவாரியான கணக்கெடுப்பு விஷயத்திலும் பாஜக எதிர்ப்பு சொல்லியதே? அப்படியிருக்கும் போது, பாஜகவுடன் ஏன் கூட்டணி வைத்தீர்கள்” என்று கேட்கவே PMK volunteer questioned Soumya,
சௌமியா மட்டுமல்லாமல், பிரச்சாரத்திற்கு அவருடன் வந்திருந்த அனைவருமே பதில் சொல்ல முடியாமல் ஒரு நொடி தினறினர்.
பின்னர், அதை சமாளித்து பதில் சொல்வதற்குள் அங்கிருந்து கிளம்பி விட்டார் அந்த இளைஞர். ஒரு பானை சோற்றுக்கு ஒது சோறு பதமாக பாஜகவுடம் பாமக கூட்டணி வைத்ததன் எதிர் வினைகள் அவ்வப்போது கிளம்பி பாமக நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதையும் படிங்க : பாட்டுப் பாடி வாக்கு சேகரித்த சீமான் | NTK | Seeman