சிறையில் மனைவியுடன் குடும்பம் நடத்திய அமைச்சரை பெண் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கையும் களவுமாக பிடித்துள்ளார். மேலும் அமைச்சருக்கு உதவிய சிறைக்காவலர் 8 நபர்களை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் எங்கு நடந்துள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.
உத்தர பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதியை சேர்ந்தவர் முக்தர் அன்சாரி (59). நிழல் உலக தாதாவாக அறியப்படும் அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து மாவ் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 5 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாஜக முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணானந்த் கொலை வழக்கு உட்பட சுமார் 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. கடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முக்தர் அன்சாரியின் மகன் அப்பாஸ் அன்சாரி (30), சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் சார்பில் மாவ் தொகுதியில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் துப்பாக்கிச் சுடும் வீரரான இவர் தேசிய அளவில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். அப்பாஸ் அன்சாரி மாவ் தொகுதியில் அமைச்சராக இருந்து வரும் நிலையில் ஹவாலா வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பாஸ் கடந்தாண்டு கைது செய்யபட்டு சித்ர கூட் சிறைக்கு மாற்றபட்டார்.
அப்பாசின் மனைவி நிக்கர் பானு. இவர் பகல் நேரங்களில் சிறைச் சாலைக்கு வந்து தனது கணவருடன் தங்கிச் செல்வதாகவும் ஆனால் அவரது வருகை சிறைப்பார்வையாளர் பதிவேட்டில் எழுதப்படாமல் நடைபெறுவதாகவும் இந்த இந்த சந்திப்புகள் சிறை கண்காணிப்பாளர் அசோக் சாகர் அலுவலக அறையிலேயே நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த தகவல் வெளி வட்டாரத்திற்குத் தெரியவரவே சித்ரகூட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிருந்தா இவர்களை கையும் களவுமாகப் பிடிக்க முடியும் செய்தார்.
இதற்காக சித்ரகூட் ஆட்சியர் அபிஷேக் உடன் ரகசியமாகத் தனியார் வாகனத்தில் வந்து திடீர் சோதனை நடத்தினர். அப்பொழுது கைதி அப்பாஸின் அறை காலியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பிறகு சிறையில் உள்ள அனைத்து காவலர்களையும் தன்னுடன் வந்த காவல் படையினரை கொண்டு சுற்றிவைத்தார்.
இந்த நிலையில் சிறை கண்காணிப்பாளர் அசோக்கின் உள்பக்கம் கதவுகள் இருந்ததாம்அந்த அறைக்குள் கைதி அப்பாஸ் மற்றும் அவரது மனைவியுடன் இருந்துள்ளன. தொடர்ந்து இவர்களை கையும் களவுமாகப் பிடித்து விசாரணை மேற்கொண்டார்.
அந்த விசாரணையில் அப்பாஸ் மற்றும் அவரது மனைவி ஒன்றாய் மாதங்களாகச் சிறை அறையில் தங்கி குடும்பம் நடத்தியது தெரியவந்துள்ளது.
மேலும் மனைவியின் கைப்பேசியைக் கொண்டு அப்பாஸ் தனது வழக்குகளையும் சாட்சிகளையும் மிரட்டி வந்ததாகவும் பணம் பறிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இவர்களை கையும் கழகமாகப் பிடித்த இளம் காவல்துறை உயர்அதிகாரி பிருந்தா அவர்களுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.மேலும் அபாஸுக்கு உதவிய 8 சிறைக் காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ததோடு மட்டுமல்லாமல் வேறொரு சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டு இந்த வழக்கை அதிரடிப்படையிலும் ஒப்படைத்தது.