சென்னையில் இருந்து மைசூர் சென்ற வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவர் சார்ஜ் போட்ட போது செல்போன் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இருந்து மைசூருக்கு இன்று வழக்கம் போல் வந்தே பாரத் ரயில் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது . அப்போது ரயிலில் C11 பெட்டியில் பயணித்த குஷ்நாத்கர் என்ற பயணி ஒருவர் ரயிலில் உள்ள ப்ளக் பாயிண்டில் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார்.
ஆம்பூரைக் கடந்து ரயில் சென்று கொண்டிருந்த போது, செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் அருகில் அமர்ந்திருந்த பயணிகள் பதற்றமடைந்து கூச்சலிட்டுள்ளனர் .
Also Read : பிற்பகலில் யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை – இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிரடி அறிவிப்பு..!!
இதையடுத்து வந்தே பாரத் ரயில் நடுவழியில் உடனடியாக நிறுத்தப்பட்டது . ரயில் நிறைவுடன் C11 பெட்டிக்கு வந்த ரயில்வே போலீசார் நிலைமையை சீராக்கினர் . இதையடுத்து சுமார் அரைமணி நேரம் கழித்து ஆம்பூரில் இருந்து வந்தே பாரத் ரயில் புறப்பட்டுச் சென்றுள்ளது.
9இந்தியாவில் நாளுக்கு நாள் செல் போன் வெடித்து சிதறும் சம்பவங்கள் அரங்கேறி வருவது செல் போன் பயனர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.