புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஏடிஎம் மையத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் தமிழில் ஆப்ஷன் இல்லை என்பதால் கோபமடைந்த மர்ம நபர்கள் செய்த காரியம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழகத்தில் இயங்கிவரும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் பெரும்பாலான பெரும்பாலான ஏடிஎம்களில் தமிழ் அல்லாத ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே இருந்துவருவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்துவருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் வங்கியில் பயன்படுத்தப்படும் பணம் செலுத்தும் செல்லானில் தமிழ் இல்லாமல் ஆங்கிலம் மற்றும் இந்தி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமூக வலைதளங்களில் இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், காரைக்காலில் உள்ள ஒரு ஏடிஎம்-ல் தமிழ் இல்லாததை கண்ட கோபத்தில் ”தமிழ் Option எங்கடா வைங்கடா” என ஏடிஎம் இயந்திரத்திலேயே எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து நேர்மறையாகவும்,எதிர்மறையாகவும் கமெண்டுகள் பதிவிட்டு வருகின்றன. ஒரு சில நெட்டிசன்கள் Option என்ற வார்த்தையை தமிழில் எழுத வேண்டியது தானே எதற்கு ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறாய் என கேள்வியெழுப்பி வருகின்றனர்.