இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை பொழிந்து வரும் நிலையில்,வருகிற 25-ம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை விலகத் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி..
வழக்கத்தை விட இந்த ஆண்டு 8 நாட்கள் தாமதமாக தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்குகிறது. அதாவது, வழக்கமாக தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 17-ஆம் தேதி விலகத் தொடங்கி அக்டோபர் 15-க்குள் முழுமையாக விலகும்.
ஆனால், இந்த ஆண்டு 8 நாட்கள் தாமதமாக வரும் 21ஆம் தேதி தென்மேற்கு பருவமழை விளக்க உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
அதன்படி, மேற்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து செப்டம்பர் 25-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்கும்.
அதனித் தொடர்ந்து, படிப்படியாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும் தென்மேற்கு பருவமழை விலகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3-வது வாரத்திற்கு பிறகு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.