குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
மோர்பி பகுதியில் கேபிள் பாலத்தில் 500 பேர் கூடிய நிலையில், கூட்ட நெரிசலில் பாலம் இடிந்து விழுந்து 141 பேர் வரை பலியாகி உள்ளனர். இந்த நிலையில் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த பாலத்தை புரனமைத்த ஒரு நிறுவனத்தின் மீது புகார் எழுந்துள்ளது.
Oreva என்ற தனியார் நிறுவனம் அரசு ஒப்பந்தம் மூலம் இந்த புனரமைப்பு பணிகளை செய்துள்ளது. குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு சியோலில் ஹாலோவீன் கொண்டாடத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 151 பேர் பலியானார்கள்.
ஒரே இடத்தில் 1 லட்சம் பேர் கூடிய நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக இவர்கள் பலியானார்கள். அதேபோல் நேற்று குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலத்தில் 500 பேர் கூடிய நிலையில், கூட்ட நெரிசலில் பாலம் இடிந்து விழுந்து 141 பேர் வரை பலியாகி உள்ளனர். 100 க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை.
1879ல் திறக்கப்பட்ட இந்த பாலம் 230 மீட்டர் நீளம் கொண்டது ஆகும். 7 மாதங்களாக மூடப்பட்டு இருந்த இந்த பாலம் புனரமைக்கப்பட்டு வந்தது. கடந்த அக்டோபர் 26ம் தேதிதான் இந்த பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. Oreva என்ற தனியார் நிறுவனம் அரசு ஒப்பந்தம் மூலம் இந்த புனரமைப்பு பணிகளை செய்துள்ளது.
இந்த நிறுவனம் பாலத்தை புதுப்பித்த பின் அதற்கான பிட்னஸ் சர்டிபிகேட் கையெழுத்தை வாங்க வேண்டும். ஆனால் அதை வாங்காமல் அவர்கள் பாலத்தை மக்களுக்கு திறந்துவிட்டதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. புகார் அரசு ஒப்பந்தம் மூலம் அந்த தனியார் நிறுவனம் இந்த பணிகளை செய்து உள்ளது. பாலம் திறந்து 4 நாட்களில் இடிந்து விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் பாலத்தில் சென்றதுதான் பாலம் இடிந்து விழ காரணம் என்று கூறப்படுகிறது. பாலத்தை திறக்கும் முன் பொதுவாக அதிகாரிகள் இதை ஒரு முறை சோதனை செய்ய வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட சோதனைகள் எதுவும் நடக்காமல் பாலம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தில் நேற்று மக்கள் இருந்த போது சிலர் உற்சாகத்தில் பாலத்தின் மீது ஓடி, குதித்து உள்ளதாக கூறப்படுகிறது.இதனால் பாலம் வேகமாக ஆட தொடங்கி உள்ளது. பாலம் ஆடிய நிலையில் அதில் இருந்த மக்களும் ஆட தொடங்கி உள்ளனர். இது பாலத்தின் ஆட்டத்தை மேலும் அதிகப்படுத்தி கடைசியில் பாலம் இடிந்து விழ காரணம் என கூறப்படுகிறது. இந்த கோர விபத்து தொடர்பாக விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் பாலம் இந்து விழுந்தது தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 141 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசிய வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் இது கடவுளின் செயலா? அல்லது ஊழல் செயலா? என பிரதமரின் வீடியோவை வைத்தே அவரை கேள்வி எழுப்பி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் பாலம் இடிந்து விழுந்தது.
இந்த பாலம் இடிந்து விழுந்ததுதொடர்பாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்து பிரதமர் மோடி பேசியிருந்தார். அதில் ‘இது கடவுளின் செயலா? அல்லது மோசடியின் செயலா?’ என்பது போன்று பேசி விமர்சனம் செய்திருந்தார். இந்த பேச்சை வைத்துதான் தற்போது பிரதமர் மோடியை டுவிட்டரில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ‘act of God’ என்ற வார்த்தை டுவிட்டரில் டிரெண்டாகியது.
இந்த நிலையில், பிரஷாந்த் பூஷன், டுவிட்டரில் பிரதமர் மோடி பேசிய வீடியோவை பகிர்ந்து; மோர்பி பாலம் இடிந்து விழுந்தது கடவுளின் செயலா? அல்லது மோசடியின் செயலா என கேள்வியெழுப்பியுள்ளார்.
Morbi bridge collapse is act of God, or act of fraud, Modiji? pic.twitter.com/FJmhbzv0m0
— Prashant Bhushan (@pbhushan1) October 31, 2022
மேலும், சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி கூறுகையில்; “மேற்கு வங்காளத்தில் பாலம் இடிந்து விழுந்தபோது பிரதமர் ஆற்றிய ‘கடவுளின் செயல் மற்றும் மோசடியின் செயல்’ என்ற உரை தனக்கு நினைவுக்கு வருகிறது. அவரது உணர்ச்சியற்ற தன்மையான வீடியோவைப் பகிரவில்லை. என குறிப்பிட்டுள்ளார்.