பரோட்டா சாப்பிட்ட பின் குளிர்பானம் குடித்த அம்மா, மகள் உயிரிழப்பு!

mother-and-daughter-dead-after-eating-chicken-gravy
mother and daughter deadafter eating chicken gravy
Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பரோட்டா கிரேவி சாப்பிட்ட பின்பு குளிர்பானம் குடித்த தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி தங்கப்ப நகரை சேர்ந்த இளங்கோவன் என்பவரது மனைவி கற்பகம். அவரது மகள் தர்ஷினி.கடலையூர் ரோட்டில் உள்ள உணவகம் ஒன்றில் பரோட்டா கிரேவி பார்சல் வாங்கியா இவர்கள் வீட்டிற்கு எடுத்து சென்று சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட உணவு நீண்ட நேரமாகியும் செரிமானம் ஆகாத நிலையில் வீட்டுக்கு அருகே உள்ள கடை ஒன்றில் குளிர்பானம் வாங்கி குடித்த இருவருக்கும் சிறிது வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

mother-and-daughter-dead-after-eating-chicken-gravy
mother and daughter dead after eating gravy and cool drinks

இதனை அடுத்து வாந்தி மயக்கம்த்துடன் இருத்த இருவரையும் குடும்பத்தினர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
இது குறித்து கோவில்பட்டிகாவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பரோட்டா சாப்பிட்டு தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் அப்பகுத்தியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Spread the love
Related Posts