கர்நாடகாவில் குடும்ப பிரச்சினை காரணமாக தனது இரண்டு பெண் குழந்தைகளை பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்த தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இவருக்கும் இவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அஞ்சனாத்ரி மலைப்பகுதிக்கு சென்ற ஜோதி தனது இரண்டு குழந்தைகள் மீதும் பெட்ரோலை ஊற்றி தீவைத்து, தனது தலையிலும் பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார்.
அப்போது இதனை பார்த்த அவ்வழியதாக வந்த பொதுமக்கள், தடுத்து நிறுத்தி இது குறித்து உடனடியாக போலீஸாருக்கும், ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றொரு குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோதியை கைது செய்த போலீஸார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.