Murasoli Editorial | ஆளுநரின் செயல் என்பது தமிழ்நாட்டையும் , தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக இன்றைய முரசொலி தலையங்கத்தில் எழுதப்பட்டிருப்பதாவது…
ஆளுநர் திருந்தவே மாட்டாரா?
தேசிய கீதம் இசைத்து மரியாதையாக அவைக்குள் அழைத்து வருகிறார்கள் ஆளுநரை. ஆனால் அவர் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறுகிறார்.
கடந்த முறையும் அதைத்தான் செய்தார். இந்த ஆண்டும் அதையேதான் செய்கிறார். ஆளுநர் திருந்தவே மாட்டார் போலும்!
ஆண்டுக்கு ஒரு முறை எழுதிக் கொடுப்பதை வாசிப்பதும் இல்லை. சபை நிறைவேற்றி அனுப்பும் சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்குவதும் இல்லை.
அரசின் கோப்புகளில் கையெழுத்து போடுவதும் இல்லை. ஆளுநர்களுக்கு இருக்கும் மொத்த வேலைகளே இந்த மூன்றுதான்.

அந்த மூன்றையும் செய்யாமல் சனாதன ஆராய்ச்சி செய்கிறார். திருக்குறள் பொழிப்புரைகளை பிரித்தெடுக்கிறார்.
குற்றவழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த நபருக்கு ஆதரவாக சேலத்துக்குச் சென்று ஆராய்கிறார்.
பொது மேடைகளில் அதற்கு தொடர்பு இல்லாத, அரசு விவகாரங்களைப் பேசுகிறார்.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1757631741659943160?s=20
மாணவர்களை கூட்டி வைத்துக் கொண்டு கோப்புகளுக்கு விளக்கம் சொல்கிறார்.
உண்மையில் அவரைப் புரிந்து கொள்வது கூட சிரமமாகத்தான் இருக்கிறது.
அவரால் ஒப்புதல் தரப்பட்ட உரையை அவரே வாசிக்க மறுக்கிறார். இதில் உள்ளது தனக்கு உடன்பாடு இல்லாதது என்கிறார்.
உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஒப்புதல் தர வேண்டும்? உடன்பாடு இல்லாத உரையை வாசிக்க மறுக்க எதற்காக ஆளுநர் மாளிகையில் இருந்து கிளம்ப வேண்டும்?
அதை ஆளுநர் மாளிகையில் இருந்தே சொல்லி அனுப்பி இருக்கலாமே? ஏன் அவர் நேரத்தை அவரே விரயம் செய்து கொண்டார்?
அந்த ஒரு மணி நேரத்தை சனாதன ஆராய்ச்சி செய்வதில் கழித்திருக்கலாமே? தான் ஒப்புதல் வழங்கிய உரையில், தவறு நிறைய இருக்கிறது என்று, அவரே சொல்கிறார்.
என்ன தவறு என்பதைச் சொன்னாரா? இல்லை. தவறைக் கண்டுபிடித்திருந்தால்தானே சொல்வார்?
‘தேசியகீதம் பாடவில்லை’ என்று தனது பழைய தேய்ந்து போன ரெக்கார்டையே பாடினார் ஆளுநர். தேசிய கீதம் இறுதியில்தான் பாடுவார்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்குவதும் – தேசிய கீதத்தில் முடிப்பதும்தான் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வழக்கம். அதையே மாற்றச் சொல்கிறார்.
(Murasoli Editorial) என்று முரசொலி காட்டமாக பதிவிட்டுள்ளது.
(தொடரும்)