slept with corpses 3days : மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட அவரையும் 2 குழந்தைகளையும் கொலை செய்து சடலங்களுடன் 3 நாட்கள் வசித்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ள இந்த பகீர் சம்பவத்தின் விவரம் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் பிஜினூர் பகுதியை சேர்ந்தவர் ராம் லகன் (வயது 32). இவருக்கு ஜோதி (வயது 30) என்பவருடன் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பயல் (வயது 6), ஆனந்த் (வயது 3) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதையும் படிங்க : பா.ஜ.கவை வலிமையோடு எதிர்க்க துணிவில்லையா? – EPS-யை கேள்வி கேட்கும் KCP!
சமீபகாலமாக மனைவி ஜோடி அடிக்கடி செல்போனில் தனிமையில் பேசுவதும், சிரிப்பதுமாக இருந்ததால், மனைவிக்கு வேறு யாருடனோ தகாத உறவு இருப்பதாக மனைவியின் நடத்தையில் ராம்லகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜோதி, செல்போனில் பேசியதை ஒட்டுக் கேட்டதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டுள்ளது.
மார்ச் 28ஆம் தேதி இரவும் மனைவியின் நடத்தை குறித்து கணவன் சந்தேகம் அடைந்து சண்டைஇட்டுள்ளார். அப்போது எழுந்த வாக்குவாதத்தின் முற்றிய நிலையில், ராம் லகன் மனைவி ஜோதியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.
மேலும் இந்த கொலைச் சம்பவத்தை குழந்தைகளும் பார்த்ததால், வெளியில் கூறிவிடலாம் என்னும் அச்சத்தில் 2 குழந்தைகளையும் தந்தை ராம் லகன் கொலை செய்துள்ளார்.
மூன்று சடலங்களையும் அப்புறப்படுத்த நினைத்தவர், தொடர்ந்து ஆட்கள் நடமாட்டம் இருந்ததால், உடல்களை வெளியே கொண்டு செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்துள்ளார் slept with corpses 3days.
3 நாட்கள் கழிந்த நிலையில் சடலத்தில் இருந்து எழுந்த துர்நாற்றத்தால், வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வந்த உரிமையாளர் மேலே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் ஜோதி மற்றும் குழந்தைகள் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையும் படிங்க :
இதனைத் தொடர்ந்து அவர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மூவரின் சடலங்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வீட்டில் இருந்த ராம் லகனைப் பிடித்து விசாரித்தபோது மனைவியின் நடத்தை சந்தேகத்தில் கொலை செய்ததை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த ராம் லக்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க : பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேட்ட 3 கேள்விகள்! – தேர்தல் விறுவிறு!!