திமுக அரசின் மூன்றாண்டு ஆட்சியில் கொலை, கொள்ளை , போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் கூறியதாவது :
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சரின் பயணத்தால் தமிழக மக்கள் பயனடைந்தால் வரவேற்புக்குரியது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க மத்திய அரசு கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும்.
Also Read : தேவரா படத்தின் தாவூதி வீடியோ பாடல் வெளியானது..!!
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மூன்றாண்டு ஆட்சியில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ள அவலம் தான் நிலவுகிறது. கொடுத்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றவில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.