மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் செய்தியாளர் (journalist) நேசபிரபுவுக்கு 3 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த நேசபிரபு பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு செய்தி சேகரிக்க சென்ற நேசபிரபு பின்னர் வீடு திரும்பி கொண்டுடிருந்துள்ளார். அப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
இதில் படுகாயமடைந்த நேசபிரபுவை மீட்ட அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த படுகாயமடைந்த நேசபிரபுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு,செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
https://x.com/ITamilTVNews/status/1750408629126377813?s=20
இதனிடையே, முன்னதாகவே மர்ம நபர்கள் தன்னை பின்தொடர்வது குறித்து முறையிட்டும் காவல்துறை தரப்பில் நடைவடிக்க எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
படுகாயமடைந்த செய்தியாளர் (journalist) நேசபிரபுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர், நேச பிரபுவை நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்ச்சி மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிங்க : Amar prasad மீது பாய்ந்த வழக்கு!-தலைமறைவான பாஜக பிரமுகர்
சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் நேச பிரபு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
மேலும் இதனை முக்கியமாக கருதி மருத்துவ சிகிச்சையில் உள்ள நேசப் பிரபு அவர்களுக்கு, பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூ 3 லட்சம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.