பழனியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது .
இந்த விழாவின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக் கம்பத்தில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கொடியை ஏற்றி வைத்தார்
மாநாட்டு நுழைவாயிலில் மழை வடிவிலான பிரம்மாண்டமான செட்-ல் சிவன்,பார்வதி, முருகன் விநாயகர், அருணகிரிநாதர், வீரபாகு போன்ற உருவங்கள் அமைக்கப்பட்டு படுபிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதையடுத்து இந்த மாநாட்டை நேற்று காணொளி மூலமாக தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துரையாற்றினார் .
Also Read : கேப்டனின் 72வது பிறந்தநாள் – தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் சிலை திறப்பு..!!
இந்நிலையில் இந்த மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை முதல் சிறப்பாக தொடங்கி நடைபெற்றது . பின்னர் காணொளி வாயிலாக இந்த மாநாட்டில் கலந்துகொண்டு நன்றியுரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது :
திராவிடம் யாரையும் ஒதுக்காது. எல்லோரையும் இணைக்கும் என்பதற்கு உதாரணம்தான் அனைத்து சாதியினரையும், மகளிரையும் அர்ச்சகராக்கியது.
முத்தமிழ் முருகன் மாநாடு ஆன்மிக மாநாடாக மட்டுமல்லாமல், தமிழர் பண்பாட்டு மாநாடாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திராவிடம் என்பது எல்லோருக்கும், எல்லாம் என்பது. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் என்றேன்றும் இடம்பெறுவது உறுதி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.