நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் மேடையின் மீது மது பாட்டில் (alcohol bottles) வீசியதை அடுத்து 2 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே சித்தமல்லியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச்செயலாளர் அலாவுதீன் தலைமை வகித்தார்.
கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பி. காளியம்மாள் பேசினார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, திமுகவை விமர்சனம் செய்து பேசினார்.
அப்போது பத்துக்கும் மேற்பட்டவர்கள் பொதுக்கூட்ட மேடையை நோக்கி சோடா பாட்டில்களை (alcohol bottles) வீசினர். எதிர்பாராத விதமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை இருப்பினும் பொதுக்கூட்டத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் சோடா பாட்டில்களை வீசிவிட்டு ஓடி சென்றவர்களில் இருவரை பிடித்து போலீஸ் ஜீப்பில் ஏற்றிச் சென்றனர். இதனால், சிறிது நேரம் தடைபட்டது.
பின்னர், கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.