நாகப்பட்டினம் மக்களவை தொகுதி உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான எம்.செல்வராசு ( Nagai MP Selvaraj ) உடல்நலக்குறைவால் இன்று காலாமாகியுள்ளார் .
திருவாரூர் மாவட்டம் கடந்த 1957 ஆம் ஆண்டு பிறந்த செல்வராஜ் இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்ட அவர், அதன் மாவட்ட, மாநிலப் பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் படிப்படியாக உயர்ந்து ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், மாநிலக் குழு உறுப்பினர், தேசியக் குழு உறுப்பினர் என பல்வேறு உயர் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
Also Read : 9 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்..!!
1989-ம் ஆண்டு நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் பேட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முறையாக மக்களவைக்கு சென்றவர். தொடர்ந்து 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் சிறுநீரக பாதிப்பு காரணமாக மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொள்ளும் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமாகியுள்ளார் .
செல்வராஜ் அவர்களின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ( Nagai MP Selvaraj ) இரா.முத்தரசன் , முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.