Narayanan Tirupathy-அரசு பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் பெண்மணியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருமையில் அலட்சியமாக பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
மருத்துவர்கள் கடவுளுக்கு சமம் என்பார்கள். மருத்துவம் தொழில் அல்ல, புனிதமான சேவை என்பதால் தான் அரசு பல்வேறு சலுகைகளை மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வழங்கி மருத்துவர்களை உருவாக்கி வருகிறது.
மொஹரம் என்ற பெண் நோயாளி வயிற்று வலியின் பொருட்டு சிகிச்சை பெற ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது,
அங்கு பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் அப் பெண்மணியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருமையில் அலட்சியமாக பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது.
பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தங்களை அடையாளப்படுத்தி கொள்வதற்காக மேல் சட்டை (Coat) அணிவது வழக்கம்.
இந்த வழக்கம் மருத்துவர்களின் மீதான மரியாதையை அதிகரிக்கவும் செய்யும். ஆனால் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர் மேல் சட்டை அணியாமல்,
வாயில் எதையோ மென்றபடி அலட்சியமாக பேசியுள்ளது மருத்துவ சேவையை அவமதிப்பாக உள்ளது.பொது மக்களின் அறியாமையால் பல மருத்துவமனைகளை, மருத்துவர்களை வசை பாடுவதை நாம் பார்த்து வருகிறோம்.
Also Read: https://itamiltv.com/rain-will-continue-in-tamil-nadu-for-the-next-7-days-and-heavy-rain/
ஆனாலும், அவர்களின் அறியாமையை புரிந்து கொண்டு சகிப்பு தன்மையோடு மருத்துவர்கள் சூழ்நிலையினை கையாள்வது அவர்களின் மேன்மை மற்றும் பண்பு.
ஏழை எளிய மக்களின் சிகிச்சைக்காக அரசு சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கியுள்ள நிலையில், அம்மக்களை துச்சமாக கருதுவது முறையற்ற செயல்.
மருத்துவர்கள் தங்களை விட வயதில் குறைந்தவர்களை, குழந்தைகளை கூட அன்போடு, பண்போடு “வாங்க, சொல்லுங்க” என்று அழைப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
Also Read: https://x.com/ITamilTVNews/status/1745789643541663885?s=20
ஆனால், தன்னை விட வயதில் பெரியவரை “நீ, வா, போ” என்ற அலட்சிய வார்த்தைகள் மருத்துவர் என்கிற மரியாதையை இழக்க செய்யும்.
தமிழக அரசு அந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுப்பதை விட முக்கியமானது, அந்த மருத்துவருக்கு அன்பையும், பண்பையும், கண்ணியத்தையும், பொது இடத்தில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டிய கடமையையும் உணர்த்த வேண்டியதே.
மூத்த அரசு மருத்துவர்கள் அந்த இளம் மருத்துவருக்கு அறிவுரை வழங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டிய அவசியத்தை உரைத்து எதிர் வரும் காலங்களில் அவரை மாற்றியமைத்துக் கொள்ள உதவ வேண்டும் என்றுநாராயணன் திருப்பதி(Narayanan Tirupathy) குறிப்பிட்டுள்ளது.