அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா நமது பிரபஞ்சத்திலிருந்து அழகான மற்றும் அதிர்ச்சியூட்டும் படங்களைத் ( nasa ) தவறாமல் பகிர்ந்து வருகிறது.
இவை விண்வெளி ஆர்வலர்களை வெகுவாக கவர்கிறது. அந்த வரிசையில், ஜேம்ஸ் வெப் ஸ்பாக் தொலைநோக்கியால் (James Webb Space Telescope (JWST)) கைப்பற்றப்பட்ட நமது வானத்தில் உள்ள மிகவும் தனித்துவமான பொருட்களில் ஒன்றான ஹார்ஸ்ஹெட் நெபூலாவின் பெரிதாக்கப்பட்ட பகுதியின் உயர் தெளிவுத்திறன் (hi-resolution) கொண்ட கூர்மையான அகச்சிவப்பு படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
நெபூலா…? அப்படியென்றால்….?
நெபுலாக்கள் என்பது நட்சத்திரத்தை உருவாக்கும் பகுதிகள் அல்லது நட்சத்திர நர்சேரி ஆகும்.
முதன்முறையாக, நமது கிரகத்தைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் வைக்கப்பட்ட மிகச் சக்திவாய்ந்த தொலைநோக்கி, ஹார்ஸ்ஹெட் நெபுலாவின் விரிவான படங்களைக் கைப்பற்றியது.
இது இதற்கு முன்பு பார்த்திராத சில பகுதிகளை முற்றிலும் மாறுபட்ட வெளிச்சத்தில் காட்டியுள்ளன.
Also Read : சத்தீஸ்கரில் 2 பெண்கள் உட்பட 7 நக்சல்கள் என்கவுண்டர்…!!
நாசாவின் இந்த படம் ஓரியன் விண்மீன் குழுவில் வானத்தின் ஒரு பகுதியைக் காட்டுகிறது.
ஓரியன் விண்மீன் குழுவிற்குள், சுழலும் ஓரியன் பி மூலக்கூறு மேகம் நட்சத்திரங்களை உருவாக்குகிறது.
தூசி மற்றும் வாயுவின் கொந்தளிப்பான அலைகளிலிருந்து ஒரு பெரிய விண்மீன் வெடிப்பு உருவாகிறது.
இதனால் உருவான நட்சத்திரங்களின் கூட்டம், தூசி மண்டலங்களுடன் சேர்ந்து குதிரை தலையைப் போலக் காட்சியளிக்கிறது. .
இந்த ஹார்ஸ்ஹெட் நெபுலா, பர்னார்ட் 33 என்று அழைக்கப்படுகிறது. இது சுமார் 1,300 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்று நாசா செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது. ஹார்ஸ்ஹெட் நெபுலா பெரிய ஓரியன் மூலக்கூறு மேக வளாகத்திற்குள் அமைந்துள்ளது.
இது நமது பால்வழி விண்மீன் மண்டலத்தில் நட்சத்திர உருவாக்கத்தின் மிக நெருக்கமான ( nasa ) மற்றும் மிகவும் சுறுசுறுப்பான பகுதிகளில் ஒன்றாகும்.