கடந்த 2019ம் ஆண்டு நிரவ் மோடி தப்பி ஓடிய விவகாரத்தில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி (rahul gandhi) பேசியிருந்த சம்பவம் மோடி சமூகத்தினர் அனைவரையும் இழிவு படுத்தும் வகையில் ராகுல்காந்தி பேசியதாக இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்,இது தொடர்பாக ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்ககோரி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார்.இந்த கிரிமனல் அவதூறு வழக்கின் விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில்,
2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நேரில் ஆஜராகி ராகுல் காந்தி,வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.இதனை தொடர்ந்து இரு தரப்பு வாதங்களை கேட்ட சூரத் நீதிமன்ற நீதிபதி காங்கிரஸ் எம்.பி. ராகுல்( rahul gandhi காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .மேலும் ,காந்திக்கு 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , ராகுல் காந்தி 2019-ல் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ராகுல் காந்தியின் அவதூறு வழக்கு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளது .
இது குறித்து பவிட்டுள்ள தனது டிவிட்டர் பக்கத்தில் ,
ராகுல்காந்தி மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல்; இந்த பாசிச நடவடிக்கைக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் நாடாளுமன்ற உறுப்பினருக்குக் கூட கருத்துச் சொல்லும் ஜனநாயக உரிமை என்பது கிடையாது என்று மிரட்டும் தொனியில் இருக்கிறது தெரிவித்த அவர்,
மேலும் ராகுல்காந்தியைப் பார்த்து பாஜக பயந்துள்ளது என்பது இதன் மூலம் நன்றாக தெரிகிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.