கடந்த 2019ம் ஆண்டு நிரவ் மோடி தப்பி ஓடிய விவகாரத்தில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி (rahul gandhi) பேசியிருந்தார்;
மோடி சமூகத்தினர் அனைவரையும் இழிவு படுத்தும் வகையில் ராகுல்காந்தி பேசியதாக இது சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கு எதிராக பாஜக அவதூறு வழக்கு தொடர்ந்தது.
இதுதொடர்பாக ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்ககோரி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார்.இந்த கிரிமனல் அவதூறு வழக்கின் விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் ராகுல் காந்தி, 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். கடந்த வாரம் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.
இந்த நிலையில், சூரத் நீதிமன்றத்திம் காங்கிரஸ் எம்.பி. ராகுல்( rahul gandhi )காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .மேலும் ,காந்திக்கு 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்:
இந்நிலையில் ,இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8ன் படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டு ஆண்டுகளோ அதற்கு மேலோ தண்டனை பெற்றால் தனது பதவியை இழப்பார் என கூறுகிறது. ராகுல் காந்தி 2019-ல் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது எம்.பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ராகுல் காந்தி விவகாரத்தில் மக்களவை பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்களவை செயலாளர் உத்பால் குமார் சிங் அறிக்கை குறிப்பிட்டுள்ளார்.
திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்.பி:
“இது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எடுக்கப்பட்ட முடிவு. ஜனநாயக விரோதமான, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கக்கூடிய மிக மோசமான செயல் இது. மக்களவையில் ராகுல்காந்தியை நேருக்கு நேர் சந்திக்க துணிவில்லாததால், அவரை தகுதி நீக்கம் செய்து, இந்திய ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறார்கள்”
முன்னாள் ஒன்றிய அமைச்சர் நாராயணசாமி:
“ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது பாஜகவின் திட்டமிட்ட செயலாகும், ராகுலின் குரலை ஒடுக்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது”
காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால்:
“நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக ராகுல்காந்தி கேள்வி எழுப்பிய நாளில் இருந்தே அவர் வாயை அடைக்க இதுபோன்ற சதி தொடங்கப்பட்டுவிட்டது;
இது பாஜக அரசின் ஜனநாயக விரோத, சர்வாதிகாரப் போக்கின் உச்சம்”
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே:
“ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய எல்லா வழிகளையும் பாஜக பயன்படுத்திவிட்டது; உண்மை பேசுபவர்களை அவர்கள் சும்மா விடுவதில்லை, ஜனநாயகத்தை பாதுகாக்க
நாங்கள் சிறைக்கு செல்லவும் தயார்”
கனிமொழி எம்.பி:
“எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கிவிட வேண்டும் என்ற அவர்களின் கடமை உணர்ச்சியை காட்டுகிறது”
அமைச்சர் உதயநிதி:
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், ராகுல்காந்தியை தகுதிநீக்கம் செய்ததற்கு அமைச்சர் உதயநிதி கண்டனம்!