katchatheevuகச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தொடர்பாக திமுக பதிலளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
கச்சத்தீவை மீட்போம் என பல ஆண்டுகாலமாக அரசியல்கட்சிகள் தேர்தலின் போது வாக்குறுதிகளை அளித்து வரும் நிலையில், இந்தியா வசம் இருந்த கச்சத்தீவு எப்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது என வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
அதில், காங்கிரஸ் கட்சி அலட்சியமாக கச்சத்தீவை விட்டுக் கொடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில்,”கச்சத்தீவை katchatheevu இலங்கைக்கு தாரை வார்த்தது தொடர்பாக திமுக பதிலளிக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் மீது பகிரங்க குற்றச்சாட்டு வைத்த பிரதமர் மோடி..!!
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்..தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கேள்விக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலமாக உண்மை வெளி வந்துள்ளது. 1976ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது கச்சதீவு கைமாறியது. இது பற்றிய முழு விவரம் 1974 ஜூன் மாதம் அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டது.
நன்றி,ஸ்டாலின் அவர்களே. ஐம்பது ஆண்டுகளாக அறிவாலயம் செய்துவரும் உண்மைக்கு புறம்பான பிரச்சாராத்தின் சாயம் வெளுத்தது. அன்று இந்திய தேசிய காங்கிரஸ் உடன், நாட்டின் ஒரு பகுதியை தாரை வார்த்த அதே கூட்டம், இன்று இண்டி கூட்டணியின் மூலம் வடக்கு தெற்கு (North-South) என்று பிரிவினை வாதம் பேசுகிறது.
இன்று வரை கச்சத்தீவு பற்றி உண்மைக்கு புறம்பாக பிரச்சாரம் செய்துவரும் ஆளும் கட்சி (அறிவாலயம்) இதற்கு பதிலளிக்க வேண்டும். கச்சத்தீவை காங்கிரசுடன் சேர்ந்து தாரைவார்த்துவிட்டு, பிறரை கேள்வி கேட்கும் போக்கு மிகவும் தவறு என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
முன்னதாக இலங்கைக்கு கச்சத்தீவு விவகாரம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி விட்டுக் கொடுத்தது இந்தியர்களை ஆவேசம் அடைய செய்துள்ளதாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் நம்ப முடியாது .இந்தியாவின் ஒற்றுமை, நலன்களை 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பலவீனப்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மீண்டும் கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.