75th Republic Day-தேசியக்கொடியை “மேஜிக்” ஓவியமாக வரைந்து சிவனார்தாங்கல் அரசுப்பள்ளி மாணவர் அசத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் K. கோகுல் என்ற மாணவர் குடியரசு தினத்தை முன்னிட்டு,
பாட்டலில் கண்ணுக்குத் தெரியாது படி தேசியக் கொடியை வரைந்து பின் வரைந்த அந்த பாட்டலில் மிரண்டா குளிர்பானம் ஊற்றும் போது மறைந்த தேசியக்கொடி கண்ணுக்குத் தெரிகிற மாதிரி தேசியக் கொடியை மேஜிக் ஓவியமாக மாணவர் கோகுல் வரைந்தார்.
இந்த மேஜிக் ஓவியத்தைப் பற்றி மாணவர் கூறுகையில்:- என் பெயர் K.கோகுல், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியம்,
சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறேன், எனக்கு ஓவியம் கற்றுக்கொள்ள ஆசை,
ஓவிய ஆசிரியர் செல்வம் சார் மிக எளிமையான முறையில் எப்படி ஓவியம் வரைய வேண்டும் என்று சொல்லித் தருவார், மற்றும் பென்சில் ஓவியம்,
இயற்கைக் காட்சியை நேரில் பார்த்து வரைவது, சோப்பில் சிற்பம், சாக்பீஸ் சிற்பம் போன்றவைகளும் கற்றுத் தருகிறார்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1750779206739574864?s=20
அதுமட்டுமல்லாமல் எங்க ஓவிய ஆசிரியர் செல்வம் சார் ஓவியத்தில் புதுமைகளையும் சாதனையும் படைத்துள்ளார். அதே மாதிரி நானும் ஓவியத்தில் சாதனை படைக்க வேண்டும்,
எங்கள் பள்ளி பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் சார் வழிகாட்டுதல்படி குடியரசு தினத்தை முன்னிட்டு மேஜிக் ஓவியமாக,
ஒரு பாட்டலில் கண்ணுக்குத் தெரியாது படி தேசியக் கொடியை வரைந்து, ஆரஞ்சு வண்ணம் கொண்ட மிரண்டா குளிர்பானம் வரைந்த அந்த பாட்டலில்,
ஊற்றும் போது கண்ணுக்கு தெரியாத இருந்த தேசியக்கொடி பளிச்சென்று கண்ணுக்குத் “மேஜிக்” ஓவியமாக தேசிய கொடி காட்சியளிக்கும் விதமாக மாணவர் K.கோகுல் வரைந்தார்.
நாட்டின் 75-ஆவது குடியரசு தினத்தையொட்டி(75th Republic Day), மாணவர் K.கோகுல் வரைந்த ஓவியதிற்கு தலைமை ஆசிரியர், ஓவிய ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்கள்.