கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் பிரசாரம் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.இந்த தேர்தலுக்காக பாஜக ,காங்கிரஸ் , மற்றும் jds ஜனதா தள கட்சிகள் மோதுகின்றன. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
சமீபத்தில், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா, கர்நாடக மாநிலத்திற்கு வந்து, அம்மாநில முதல்வர் பசுவராஜ் பொம்மை போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் சினிமா நட்சத்திரங்களும் தங்கள் கட்சிக்கு வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக,கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் மதச்சார்பற்ற ஜனதா கட்சியில் இருந்த அவர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில், சிவமோக்கா நகரில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் கலந்துகொண்டார்.
அப்போது சிவராஜ்குமார் பேசிய போது,தான் ராகுல் காந்தியின் தீவிர ரசிகன் என நெகிழ்ந்தார். ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையை பார்த்து அவர் மீது பற்று வந்ததாகவும், இப்போது காங்கிரசுக்கு பிரசாரம் செய்ய களத்தில் இறங்கியதாகவும் குறிப்பிட்டார். மேலும் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் சிவராஜ்குமார் மக்களிடம் பிரச்சாரம் செய்தார்.