The Kerala Story திரைப்படம் தீவிரவாதத்தை அம்பலப்படுத்தும் படம். தீவிரவாதத்தின் உண்மையை காட்டுகிறது. ஆனால் காங்கிரஸ் இப்படத்தை எதிர்க்கிறது என கர்நாடக பரப்புரையில் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
இந்தி இயக்குனர் சுதீப்தோ சென் ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் கேரளாவைச் சேர்ந்த 32,000 இளம்பெண்கள் காணாமல் போய் பயங்கரவாத அமைப்புகளில் சேரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த ட்ரைலர் வெளியானதிலிருந்தே சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கைவைத்துவருகின்றனர்.
மேலும், இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பலத்த எதிர்ப்புகளுக்கு தி கேரளா ஸ்டோரி படம் இந்தியா முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டிலும் இந்தி பதிப்பு மட்டும் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சட்டபேரவை தேர்தல் வரும் 10 தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் களம் சுடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருக்கிறார்.இந்த நிலையில் பெல்லாரியில் நடந்த நிகழ்ச்சியில், the kerla story படத்தை குறிப்பிட்டு, காங்கிரஸ் மீது பிரதமர் குற்றம் சாட்டினார்.
‘ the kerla story ’ திரைப்படம் தீவிரவாத சதியை அடிப்படையாகக் கொண்டது. தீவிரவாதத்தின் உண்மையைக் காட்டும் படம் இது. தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத போக்குகளை வெளிப்படுத்தும் படங்களையும் காங்கிரஸ் எதிர்க்கிறது. வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் இதை செய்கிறது. இந்த படத்திற்கு எதிராக அதிக எதிர்ப்பை ஏற்படுத்துவது காங்கிரஸ் கட்சிதான் பிரதமர் தெரிவித்தார்.
அதே சமயம் கேரளக் கதை என்பது வரலாற்றைச் சொல்லும் படமல்ல,சமூகத்தில் நிலவும் புதிய தன்மைக் கொண்ட தீவிரவாதத்தை எடுத்துக் காட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போது தீவிரவாத குழுகளுக்கு முன் மண்டியிட்டிருந்தது தீவிரவாதத்திலிருந்து காங்கிரஸ் நம்மைப் பாதுகாக்கவில்லை’ என்று கடுமையாக விமர்சித்து இருந்தார்.