மத்திய அரசு நாட்டு மக்களுக்கு பொருளாதார மற்றும் சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா.
கடந்த 2015 ஆம் தேதி இந்த திட்டம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் ,அமைப்புசாரா துறையில் உள்ளவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக முதுமை காலத்தில் நிதியுதவி வழங்க இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் சேருபவர்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற முடியும் அடல் பென்ஷன் யோஜனா தினசரி ஊதியம் பெறுவோர், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் முறையான ஓய்வூதியத் திட்டம் இல்லாத சிறு வணிகர்களுக்கான இடைவெளியை நிரப்புகிறது.
இந்த திட்டத்தில் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம்,வயதுக்கு ஏற்ப பிரீமியம் செலுத்தி ரூ.1000, ரூ.2000, ரூ.3000, ரூ.4000, ரூ.5000 ஓய்வூதியமாக பெறலாம்.
இந்தத் திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் சேருவது எப்படி? யார் தகுதியானவர்கள்?
மேலும் இந்த திட்டத்தில் சேருவது எப்படி? யார் தகுதியானவர்கள்? இவை குறித்த விவரங்களை தெளிவாகப் பார்ப்போம்.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 60 வயதை கடந்த பிறகு ஓய்வூதியம் வழங்கும் வகையில் இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம். விவசாயத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும். இத்திட்டத்தில் சேர்பவர்களுக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியமாக மத்திய அரசு வழங்கும்.
செலுத்தப்படும் பிரீமியம் வாடிக்கையாளரின் வயதைப் பொறுத்து மாறுபடும். 18 வயது நிரம்பிய ஒருவர் சேர்ந்தால் மாதம் ரூ.42 முதல் ரூ.210 வரை செலுத்தலாம்.60 வயது வரை மாதம் ரூ.210 செலுத்தி வந்தால், ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும்.
40 வயதான ஒருவர் மாதம் ரூ.1,454 பிரீமியம் செலுத்த வேண்டும். அப்போதுதான் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் பெற முடியும். ஓய்வூதியம் குறைவாக இருந்தால் சரி என்று நினைத்தால் குறைந்த பிரீமியம் செலுத்தலாம். பிரீமியம் நிலை ரூ.291 முதல் ரூ.1,454 வரை உள்ளது.
இதையும் படிங்க: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்களுக்கு வழங்கப்பெறும் நலத்திட்டங்கள்..!
அடல் பென்ஷன் யோஜனா தகுதி
- 18 – 40 வயதுடைய இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் APY பொருந்தும்
- இந்த தயாரிப்புக்கு KYC இணக்கமான வங்கிக் கணக்கு அவசியம்