BREAKING | ‘கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்யபட்டுள்ளார்.
மேலும் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் தேர்வு.
வரும் 20ம் தேதி பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. இந்த நிலையில், முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த சில தினங்களாக டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மலிகார்ஜுன காரக்கே ,பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றனர்.
இதனையடுத்து கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் ,டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சரக தேர்வு செய்யபட்டதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தற்பொழுது அறிவித்துள்ளார்.