சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து அவை முடியும் முன்னே பாதையில் வெளிநடப்பு செய்த சம்பவம் தமிழக சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பிரபல வலைதள ஊடகமாக இருப்பது i tamil. இந்த ஊடகத்தின் நெறியாளர் கோபிநாத் மூத்த பதிரிக்கையாளர் எஸ்பி லட்சுமணனிடம் அண்மையில் நேர்காணல் ஒன்றை நடத்தினார். அப்போது நெறியாளர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக தேசிய கீதம் பாடும் முன்பே ஆளுநர் வெளிநடப்பு செய்தார்.இந்த சம்பவத்தில் முதல்வர் செய்தது தவறா ? இல்லை ஆளுநர் செய்தது தவறா ?என கேள்வி எழுப்பினார்.
இதற்க்கு பதில் அளித்த மூத்த பதிரிக்கையாளர் எஸ்பி லட்சுமணன்
- சட்டசபையில் நடந்தது மரபு மீறல். அரசு மற்றும் ஆளுநர் தரப்பினருக்கு இடையே நடந்துள்ளது. மேலும் ஆளுநர் உரை என்பது மாநிலத்தில் நடைபெறும் அரசின் கொள்கைகளை வாசிப்பது தான் ஆளுநர் உரை. அது தான் அரசியல் சட்டம் சொல்கிறது.
- அமைச்சரவையில் உருவாக்கப்பட்ட அறிக்கையில் உள்ள சில பகுதிகளை ஆளுநர் தவிர்த்த சம்பவம் மரபு மீறல்.
- தமிழக அரசின் அறிக்கையில் தவிர்க்க பட்ட வார்த்தைகளுக்கு முதல்வர் கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவந்தது அதுவும் மரபு மீறல்
- மேலும் ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த விளக்க உரை என்பது தேவை அற்றது. ஏன் என்றால் ஆளுநருக்கு சட்ட திருத்தம் தெரியவில்லை.
- மேலும் 356 சட்டவிதியின் படி மாநில அரசை நீக்கம் செய்வதற்க்கு சட்டம் இருக்கும் நிலையில், மாநில அரசை மத்திய அரசு கலைக்கும் நிலை என்ன ?
- மேலும் ஆளுநர் தமிழ் நாடு என கூறுவது தவறு என்று கூற ஆளுநருக்கு அருகதை இல்லை என்று எஸ்பி லட்சுமணன் தெரிவித்துள்ளார் . மேலும் இது போன்ற கேள்விகளுக்கு இந்த வீடியோவில் விளக்கமாக தெரிவித்துள்ளார்