தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திமுக போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறது.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ‘நீட் விலக்கு நம் இலக்கு’ என்ற தலைப்பில் திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தில் கையெழுத்திட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்படவுள்ளது. இந்த கையெழுத்து ஆவணங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளதாவது..
“நீட் ஒழிப்புக்கு சேர்ந்து போராடலாம் வாங்க.. பாஜகவோடு கூட்டணிகள் இருந்தவரை தான் உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.. இப்போது தான் வெளியே வந்து விட்டீர்களே.. நீட் ஒழிப்புக்காக சேர்ந்து போராடலாம்.. இது மாநில உரிமை பிரச்சினை.. கையெழுத்து இயக்கத்திற்கு நீங்களும் வாருங்கள்.. நீட் ஒழிந்தால் கிடைக்கும் கிரிடிட்டை நீங்களும் பெறலாம்.. என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.