நேற்று முன்தினம் (ஜூன் 18) நாடு முழுவதும் நடைபெற்ற UGC NET தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
UGC NET தேர்வில் முறைகேடு அம்பலம் ஆனதை அடுத்து வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் தேர்வை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது .
Also Read : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைப்பு..!!
தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தேசிய சைபர் குற்றப் பிரிவில் இருந்து தகவல் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய தேர்வுக்கான தேதி தனித் தனியாக பகிரப்படும் எனவும், இந்த முறைகேடுகள் குறித்த விசாரணை ( UGC NET ) சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் எனவும் மதியம் கல்வி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.