எலும்பு முறிவு காரணமானாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவை தெலங்கானா புதிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் எர்ரவெல்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தடுக்கி விழுந்ததில், இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
சந்திரசேகர் ராவின் இடது இடுப்பு மற்றும் கழுத்துப் பகுதியில் முறிவு ஏற்பட்டு உள்ளது என்றும் இதற்காக அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் முழுமையாக குணமடைய 6 முதல் 8 வாரங்கள் வரை ஆகும் என மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது .
பொது மருத்துவம் மற்றும் வலி நிவாரண மருத்துவம் உள்ளிட்ட நிபுணர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் அவரது உடல்நிலை நல்ல நிலையில் உள்ளது என்றும் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவை தெலங்கானா புதிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.