மீண்டும் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : நாளை மற்றும் 19-ந் தேதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்லத்தடை

new-depression-form-in-Bay-of-bengal
new depression form in Bay of bengal

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள் காரைக்கால், புதுக்கோட்டை மற்றும் அதனையொட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

மேலும் நாளை முதல் 19 வரை தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

வருகிற 17-ந் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

new-depression-form-in-Bay-of-bengal
new depression form in Bay of bengal

மேலும் நாளை மற்றும் 19-ந் தேதிகளில் குமரிக்கடல் பகுதி மற்றும் இலங்கைக்கு தெற்கே பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Total
0
Shares
Related Posts