அமெரிக்காவின் கடலோர மாநகரமான நியூயார்க் (new york city), கடலுக்குள் வேகமாக மூழ்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக கடலின் மட்டம் உயர்ந்து வருவதால், உலகம் முழுவதும் உள்ள கடலோர பகுதிகள் மூழ்கி வருவதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், நியூயார்க்கில் (new york city) உள்ள வானளாவிய கட்டிடங்களின் கட்டுமானமே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
மற்ற நகரங்களில் உள்ள கட்டிடங்களைவிட அமெரிக்காவில் உள்ள வானளாவிய கட்டிடங்கள் கனஅடி தோறும் உருவாக்கும் அழுத்தம் கடலோர மாநகரங்களின் எடையை அதிகரித்து அவை கடலில் மூழ்கும் வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்றும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
தற்போது, நியூயார்க்கின் மக்கள் தொகை 84 லட்சம் என்ற அளவில் இருக்கும் நிலையில், அங்குள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்களின் எடை 1.7 டிரில்லியன் பவுண்ட் ஆகும்.
இதனால், ஆண்டுக்கு 1 முதல் 2 மிமீ அளவு நியூயார்க் நகரம் கடலில் மூழ்கி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், லோயர் மன்ஹாட்டன், புரூக்ளின், குயின்ஸ் போன்ற பகுதிகள் அதிவேகமாக மூழ்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆபத்தை எதிர்கொள்வது நியூயார்க் மட்டுமல்ல, காலநிலை நெருக்கடி காரணமாக, உலகெங்கிலும் உள்ள பல கடலோர நகரங்களுக்கும் இந்த அச்சுறுத்தல் உள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அதில், சென்னை மாநகரத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.